ஊழியர்களுக்கான ஈ.எஸ்.ஐ பங்களிப்பு சதவீதத்தை குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மாதத்திற்கு 21 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் ஊதியம் பெறும் நபர்கள் ஈ.எஸ்.ஐ திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். இதற்காக மாதம்தோறும் ஊழியர்களின் ஊதியத்திலிருந்து 1 புள்ளி 75 சதவீதமும் நிறுவனங்களின் தரப்பில் 4 புள்ளி 75 சதவீதமும் பங்களிப்பு தொகையாக வசூலிக்கப்படும். இந்தநிலையில் இந்த பங்களிப்பு தொகையை குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஊழியர்கள் 0 புள்ளி 75 சதவீதமும் நிறுவனங்கள் 3 புள்ளி 25 சதவீதமும் என மொத்தம் இனி 4 சதவீதம் மட்டும் மாத சந்தா தொகையாக செலுத்தினால் போதும். இந்த உத்தரவு ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈ.எஸ்.ஐ திட்டத்தின் கீழ் மருத்துவம், உடல் உறுப்பு இழப்பு, இறுதிச் சடங்கு செலவு, வேலை இழப்பு உள்ளிட்டவற்றுக்கு காப்பீடு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post