கொரோனா தொற்று தடுப்புக்கு பயன்படும் முகக்கவசம், ஹான்ட் சானிடைசர் ஆகியவற்றை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் மத்திய அரசு சேர்த்துள்ளது.
உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா இந்தியாவிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் இதுவரை 81 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று தடுப்புக்கு முகக்கவசம், மற்றும் சானிடைசர் இரண்டும் முக்கியமாக பயன்படுகிறது. கொரோனா பீதியால் இவை மக்களுக்கு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இவை தாராளமாக கிடைக்கும் வகையில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் மத்திய அரசு சேர்த்துள்ளது. ஜூன் கடைசி வரை இப்பொருட்கள் அத்தியாவசிய பட்டியலிலேயே இருக்குமெனவும், இவற்றின் உற்பத்தி, தரம் ஆகியவற்றை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
——————
Discussion about this post