கடந்த மாதம் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய குழு கூட்டத்தில் ஜூன் மாதத்திற்கான 9 புள்ளி 19 டி.எம்.சி நீரை உடனடியாக தமிழகத்திற்கு திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய உரிய நீரை கர்நாடகா அரசு திறந்துவிடவில்லை. இந்தநிலையில், வரும் 25ஆம் தேதி டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய குழு தலைவர் மசூத் உசேன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகளுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் ஜூன் மாதத்திற்கான உரிய நீரை திறக்காத கர்நாடகாவின் அடாவடித்தனம் குறித்து கேள்வி எழுப்ப தமிழக பிரதிநிதிகள் முடிவு செய்துள்ளனர்.
Discussion about this post