நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள ரேலியா அணையின் கொள்ளளவை அதிகரிக்க முடியாது என்றம், கூடுதலாக தடுப்பணை கட்டி தண்ணீரை சேமிக்க அரசுக்கு திட்டமதிப்பீடு வழங்கப்பட உள்ளதாக, தமிழ்நாடு ஏற்றுமதி துறை துணைத் தலைவர் நீரஜ் மிட்டல் கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் குறித்த ஆலோசனை தமிழ்நாடு ஏற்றுமதி துறை துணை தலைவர் நீரஜ் மிட்டல் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் துறை அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, நீரஜ் மிட்டல் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். ரேலியா அணையின் கொள்ளளவை அதிகரிக்க முடியாது என்றும், கூடுதலாக தடுப்பணை கட்டி தண்ணீரை சேமிப்பதற்கான திட்ட மதிப்பீட்டை அரசுக்கு வழங்க உள்ளதாக கூறினர். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பாதுகாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post