அமெரிக்காவில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பெண்ணுக்கு அதிகளவு உணவு சாப்பிட்டதற்காக மணப்பெண் வீட்டிலுருந்து பில் அனுப்பியுள்ள சம்பவம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் திருமண நிகழ்ச்சிக்கு தாய் ,மகன் இருவரும் சென்றுள்ளனர். அங்கு அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது, அதில் பெரியவர்களுக்கு மற்றும் சிறியவர்களுக்கு என தனி தனி மெனுக்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகனுக்கு 16 வயதை எட்டிய நிலையில் பெரியவர்களுக்கு வைக்கப்பட்டிருந்த உணவை தேர்வு செய்து சாப்பிடுள்ளனர். இதையடுத்து திருமண நிகழ்வு முடிந்து வீட்டுக்கு திரும்பிய பெண்ணுக்கு ஒரு அதிர்ச்சி தகவலாக அந்த மணப்பெண்ணார் வீட்டிலிருந்து ஒரு கடிதம் வந்துள்ளது.
அதில் தங்களின் மகன் பெரியவர்களுக்கென வைக்கப்பட்டிருந்த உணவை தேர்வு செய்து சாப்பிட்டதால் கூடுதல் கட்டணத்தை விருந்து ஏற்பாடு செய்தவர்கள் கேட்டுள்ளனர் என்றும் அதற்கான பில் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை பற்றி சமூகவலைதளத்தில் பகிர்ந்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
Discussion about this post