பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 909 பேர் உயிரிழந்த நிலையில், அதிக உயிரிழப்புகளை சந்தித்த 2 வது நாடாக உள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் பிரேசிலில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு திணறி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பிரேசில் நாட்டில் இதுவரை இல்லாத வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 982 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது அந்நாட்டு மக்களை பீதி அடைய வைத்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 29 ஆயிரத்து 902 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 909 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த 2 வது நாடாக உள்ளது. அந்நாட்டில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post