உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கிய தமிழகத்திற்கு மத்திய அரசு விருது

உறுப்பு தானத்தில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்வதால், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது.

9-வது உடலுறுப்பு தான தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. தமிழகம் தொடர்ந்து நான்காவது முறையாக இந்த ஆண்டும் விருது பெற்றுள்ளது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விருதை பெற்றுக்கொண்டார்.

விழாவில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை சீரமைப்பில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உடலுறுப்பு மாற்று ஆணையம் துவங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தமிழ்நாட்டில் இதுவரை ஆயிரத்து 198 நபர்களிடமிருந்து, 6 ஆயிரத்து 886 உறுப்புகள் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தமிழகம் உறுப்பு தானத்தில் சிறப்பாக செயல்படுவதாகவும், பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்வதாகவும், பிரதமர் தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டியிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Exit mobile version