நாடு முழுவதும் உள்ள நதிநீர் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினைகளைத் தீர்க்க, தற்போது, 9 வகையான தீர்ப்பாயங்கள் இருக்கின்றன. இதில் 4 தீர்ப்பாயங்கள் தீர்ப்பளிப்பதற்காக 10 முதல் 28 ஆண்டுகள் வரை எடுத்துக்கொண்டன. நதிநீர் விவகாரத்தில் தீர்ப்பளிப்பதற்கு எந்தவிதமான காலக்கெடுவும் இல்லாததால், கால வரையின்றி நீடித்துவருகிறது. இதைக் குறைத்து குறுகிய காலத்துக்குள் தீர்வு கிடைப்பதற்காக, நாடு முழுவதும் உள்ள நதிநீர் பிரச்சனைகளுக்கு ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்தது.
இதையடுத்து சமீபத்தில் இந்த மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. இதையடுத்து புதனன்று, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் இந்த மசோதாவை அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து மசோதாவானது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
Discussion about this post