இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இருப்பினும், அக்கட்சிகள் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற முடியவில்லை. தேர்தல் தோல்விக்கு , ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டனர். இந்த நிலையில், மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில், அகிலேஷின் சமாஜ்வாடி கட்சி, யாதவர் மற்றும் தலித் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றும், மேலும், முலாயம்சிங், பா.ஜ., வுடன் மறைமுகமாக கை கோர்த்துக் கொண்டு, தனக்கு எதிராக சதிகள் செய்தனர் என்று விமர்சித்துள்ளார். எனவே, இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என மாயாவதி அறிவித்துள்ளார். உத்திர பிரதேசத்தல் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணி முறிந்த நிலையில் மாயாவதி இந்த அறிவிப்பினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Discussion about this post