கரிபீயன் தீவில் மையம் கொண்டிருந்த டொரியன் புயல் தாக்கியதில் பாஹாமஸ் தீவு முற்றிலும் உருக்குலைந்துள்ளது.
டொரியன் புயல் மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில்சுமார் 13 ஆயிரம் வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. மரங்கள், மின்கம்பங்கள் பிடுங்கி வீசப்பட்டன. கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அட்லாண்டிக் கடலில் இதுவரை உருவாகிய புயல்களில் மிகவும் வலிமையானதாக கருதப்படும் டொரியன் புயல் அமெரிக்காவின் புளோரிடா மற்றும் கலிபோர்னியா பகுதிகளிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் பல்கலைக் கழகங்கள், விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட பகாமாஸ் நாட்டிற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
Discussion about this post