பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுவதால் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 27வது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுவதால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக அயோத்தி நகரம் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கேரளாவிலுள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் கோயில்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னரே ரயில் நிலையத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதே போல், தஞ்சை ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6 தினத்தை முன்னிட்டு தஞ்சை ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பயணிகளின் உடைமைகள் உள்ளிட்ட பொருட்களை வெடிகுண்டு நிபுணர்கள் கொண்டு அவர்கள் சோதனை செய்தனர். மேலும் எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Discussion about this post