தீவிரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்பது எந்தவொரு மதத்துக்கும் எதிரானது கிடையாது என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இஸ்லாமிய நாடுகளின் வெளியுறத்துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சிறப்பு விருந்தனராக கலந்துகொண்டார். கூட்டத்தில் பேசிய சுஷ்மா,இஸ்லாமிய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பது மகிழ்ச்சி என்றும், இஸ்லாமிய நாடுகளுடன் இந்தியாவுக்கு நெருங்கிய உறவு உள்ளது என்றும் தெரிவித்தார்.
தீவிரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்பது எந்தவொரு மதத்திற்கும் எதிரானது அல்ல என்றும் அனைத்து மதங்களும் அமைதியை விரும்புவதாக அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் அதை முழுமையாக கைவிட வேண்டும் என்று சுஷ்மா கேட்டுக் கொண்டார்.
Discussion about this post