இஸ்லாமிய மதத்தினர் கடைபிடிக்கும் முத்தலாக் விவகாரத்தில், மத்திய அரசு சில அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இஸ்லாமிய ஆண்களுக்கு எதிராக பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் எடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதையடுத்து, 3 திருத்தங்களை செய்துள்ள மத்திய அரசு, சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்கிறது. மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதும், திருத்தங்களுடன் கூடிய மசோதாவை மக்களைவைக்கு அனுப்பப்பட்டு நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post