திருநங்கைகள் உரிமை பாதுகாப்பு மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி நூற்றுக்கணக்கான திருநங்கைகள் சென்னை அரசினர் விருந்தினர் மாளிகை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கடந்த 17-ம் தேதி மாற்றுப் பாலின பாதுகாப்பு மசோதாவை நாடளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த மசோதாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் யார் என்பதை வரையரை செய்ய வில்லை என்றும், தட்சணை பெற்றுக்கொண்டு ஆசிர்வாதம் பெறும் முறையை இந்த மசோதா தண்டணைக்குறிய குற்றமாக வரையறுத்துள்ளது.
இதனால் பல திருநங்கைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டு எழுந்தது. இதனைக் கண்டித்து அரசு விருந்தினர் மாளிகை முன்பு நுற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
Discussion about this post