விவசாயிகளின் மகன்களால் நடத்தப்படும் இந்த அரசு விவசாயிகளுக்கு என்றும் துணை நிற்கும் என அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில், 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு கட்டப்பட்டது. இதை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மணிகண்டன், விவசாயிகளின் மகன்களால் நடத்தப்படும் இந்த அரசு விவசாயிகளுக்கு என்றும் துணை நிற்கும் என்று கூறினார்.
Discussion about this post