அதிமுக வெற்றிக் கூட்டணியில் தேமுதிக அதிகாரப் பூர்வமாக இணைந்தது. அந்தக் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை கிரவுண் பிளாசாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
தேமுதிக தரப்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சுதிஷ் ஆகியோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையின் முடிவில் தேமுதிகவிற்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
Discussion about this post