அதிமுக அரசு எப்போதும் மக்கள் பக்கமே இருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதனையொட்டி நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில், பங்கேற்ற செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அதிமுக அரசு எப்பொழுதும் மக்களின் பக்கமே நிற்கும் என்றும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மகத்தான வெற்றியை பெறுவார்கள் என்றும் கூறினார்.
Discussion about this post