சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கொடுக்கும் அதிமுக அரசு, கொள்கைகளை எப்பொழுதும் விட்டுக் கொடுக்காது என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சுந்தராபுரம், செல்வபுரம், தொண்டாமுத்தூர் பகுதிகளில், பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும், அதிமுக வேட்பாளர் சி. மகேந்திரனை ஆதரித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சுறாவளி பிரசாரம் மேற்கொண்டார். அதிமுக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை குறிப்பிட்டு பேசிய அவர், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கொடுக்கும் அதிமுக அரசு, கொள்கைகளை எப்பொழுதும் விட்டுக் கொடுக்காது என்று கூறினார். தமிழகம் செழிக்க காவிரி-கோதாவரி இணைப்பு திட்டம் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார்.
Discussion about this post