தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத்திடம் வெற்றிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்றது. அதிமுக சார்பில் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை முடிவில் 4 லட்சத்து 99 ஆயிரத்து 354 வாக்குகளை பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத்குமார், வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை 73 ஆயிரத்து 319 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதையடுத்து வெற்றிக்கான சான்றிதழை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட அதிகாரி பல்லவி பல்தேவ் வழங்கினர்.
Discussion about this post