வருகிற 2021ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் மகத்தான வெற்றி பெறுவதே அஇஅதிமுகவின் இலக்கு என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் கனவை நனவாக்க கடமை, கண்ணியம் மற்றும் கட்டுப்பாட்டுடன் அஇஅதிமுக தொண்டர்கள் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து 3வது முறையாக 2021ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் மகத்தான வெற்றி பெறுவதே அஇஅதிமுகவின் இலக்கு எனவும் துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார். “தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே” எனவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post