கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த காடம்பாறை அருகே மலை வாழ் மக்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் சுமார் 15 க்கும் மேற்பட்டோர் மினி லாரியில் சென்று கொண்டிருந்தனர்.
வால்பாறையில் உள்ள காடம்பாறை அருகே சென்ற போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து. அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவு என்பதால் விபத்து ஏற்பட்டது யாருக்கும் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அதிகாலை அவ்வழியாக சென்றவர்கள் அலறல் சத்தம் கேட்டு விபத்து குறித்து ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்த பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில் நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து காடம்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Discussion about this post