மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஒரு வார காலமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 600 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கி உள்ளது.
மேட்டூரில் 840 மற்றம் 600 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. 840 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் கொண்ட 4 அலகுகள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றிலிருந்து தினமும் 1,440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக நாள் ஒன்றுக்கு 23,000 டன் நிலக்கரி எரிக்கப்படுகிறது. இந்நிலையில், 600 மெகாவாட் திறன்கொண்ட அனல் மின் நிலையத்தில் கடந்த 4ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
தற்போது மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு இருப்பதால், 600 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.