சென்னை தியாகராய நகரில் உள்ள மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சி விழாவில், மாணவிகள் உருவாக்கிய 6 அடி உயர ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில், 6 அடி உயர ரோபோ ஒன்றை தனியார் கல்லூரி மாணவிகள் வடிவமைத்துள்ளனர். தனியார் மகளிர் கல்லூரியில் பி.சி.ஏ படிக்கும் இறுதியாண்டு மாணவிகள், 6 அடி உயரமும், 29 கிலோ எடையும் கொண்ட சாரா என்ற நகர்ந்து செல்லும் தன்மை கொண்ட ரோபோவை உருவாக்கி உள்ளனர்.
இந்த ரோபோ, ஒரு வரவேற்பாளர் போல் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிதாக கல்லூரிக்கு வரக்கூடிய விருந்தினர்களை வரவேற்று, கல்லூரி பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவும், அதில் உள்ளீடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.