பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில், 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக காணொலி வாயிலாக நடைபெற்று வந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், 20 மாதங்களுக்கு பிறகு இன்று நேரடியாக நடைபெறுகிறது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில், கொரோனா மருந்துகள் தொடர்புடைய அத்யாவசிய பொருட்களுக்கு வரிவிலக்கு அளிப்பது தொடர்பாகவும்,
Swiggy, Zomato போன்ற ஆன்லைன் உணவுப் பொருட்கள் விநியோக நிறுவனங்களையும் ஜிஎஸ்டி வரியின் கீழ் கொண்டு வந்து, 5 சதவீதம் வரி விதிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
மேலும், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதற்கு கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
Discussion about this post