ஆரணியில் உள்ள கயிலாயநாதர் திருக்கோவில் 42-ம் ஆண்டு நவராத்திரி விழா கோலாகமாக கொண்டாடப்பட்டது.
ஆரணி கோட்டைப் பகுதியில் உள்ள அறம்வளர் நாயகி சமேத கயிலாசநாதர் கோவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்தக் கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
நவராத்திரி விழாவை முன்னிட்டு தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கஜலட்சுமி சிறப்பு அலங்காரத்தில் 500, 200, 100, 50, 20 ரூபாய் நோட்டுக்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
25 லட்சம் ரூபாயில் இந்த அலங்காரம் மேற்கொள்ளப்பட்டது.
50 சவரன் ஆபரணங்கள், 10 கிலோ வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் காட்சியளித்தார். இந்த விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு லட்சுமி தேவியை வழிபட்டனர்.