கோவையில் 34வது அரசு பொருட்காட்சியை செய்தித்துறை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கோவை மத்திய சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் அரசு சார்பில் பொருட்காட்சியை செய்தி துறை இயக்குனர் சங்கர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி ஆகியோர் துவக்கி வைத்தனர். 45 நாட்கள் நடைபெறவுள்ள இந்த பொருட்காட்சியில் குடும்ப நலவாழ்வு, கால்நடை பராமரிப்புத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, ஊராட்சித்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், மாணவர்கள் அதிகளவில் பொருட்காட்சிக்கு வருகை தருவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தைகளை கவரும்விதத்திலும், பொருட்காட்சியில் ராட்டினம், இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரியவர்களை கவரும்விதத்தில் தினந்தோறும் கலையரங்கில் பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
Discussion about this post