எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், இந்தியா, சீனா இடையேயான 21-வது கட்ட பேச்சுவார்த்தை அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
இந்தியாவும், சீனாவும் 3 ஆயிரத்து 488 கிலோ மீட்டர் தூர எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. இவ்விரு நாடுகளும் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளில் சுமூகத் தீர்வு காண கடந்த ஆண்டுகளில் 20 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.
முன்னதாக டோக்லாம் பிரச்சனையின் எதிரொலியாக இருநாட்டுப் பிரதமர்களிடையேயான சந்திப்பு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை இருநாட்டு பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி யைச் சந்திக்க உள்ளார்.
Discussion about this post