18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்

4ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிகளில், 45 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். ஜகார்த்தாவில் உள்ள ஜெலரோ பங் கர்னோ விளையாட்டரங்கில் தொடங்க விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 4000 கலைஞர்கள் பங்கேற்கும் வகையில், பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்திய நேரப்படி, மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சிகள், இரவு பத்து மணி வரை நடைபெறுகிறது. இந்தியா சார்பில் 524 வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியார்கள் குழு பங்கேற்கின்றனர். ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக, உலகின் பெரிய விளையாட்டு போட்டியாக ஆசிய விளையாட்டுப்போட்டி திகழ்வதால், இந்த போட்டியில், அதிக பதக்கங்களை வெல்லும் முனைப்பில் இந்திய வீரர்கள் உள்ளனர்.

 

Exit mobile version