பெரும் எதிர்பார்ப்புக்கிடையே 12 வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா நாளை இங்கிலாந்தில் தொடங்குகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 50 ஓவர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி 12 வது உலக கோப்பை போட்டிகள் நாளை இங்கிலாந்தில் தொடங்குகிறது. அதிகபட்சமாக 4 முறை உலக கோப்பை போட்டியை நடத்திய இங்கிலாந்து தற்போது 5 வது முறையாக போட்டியை நடத்த உள்ளது. லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
உலக கோப்பை போட்டியை பொறுத்த வரை ஆஸ்திரேலியா 5 முறையும், இந்தியா, மேற்கிந்திய தீவுகள் தலா 2 முறையும், இலங்கை, பாகிஸ்தான் தலா ஒரு முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளன. தற்போது நடைபெற உள்ள 12 வது உலக கோப்பையில், மொத்தம் 10 அணிகள் 48 ஆட்டங்களில் விளையாட உள்ளது. கடந்த 2011, 2015 உலகக் கோப்பை போட்டிகளில் மொத்தம் 14 அணிகள் இடம் பெற்றிருந்த நிலையில், தற்போது 10 அணிகளாக குறைக்கப்பட்டுள்ளன. இத்தொடரில் இடம்பெற்றுள்ள வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் அணிகள் எதிரணிக்கு கடும் சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரும் 5 ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது.
Discussion about this post