புரட்சி துறவி என்று போற்றப்படும் ராமானுஜருக்கு மந்திரத்தை கற்றுத்தந்த திருக்கோஷ்டியூர் நம்பியின் ஆயிரத்து 33-வது வருட அவதார திருநாள் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆழ்வார்களால் பாட பெற்ற திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவிலில் திருக்கோஷ்டியூர் நம்பியின் 1033-வது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் சவுமிய நாராயண திருக்கோயில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படும் இத்திருக்கோவிலில் நம்பியாண்டார், ராமானுஜருக்கு மந்திரங்களை உபதேசித்த சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக போற்றப்படுகிறது. திருக்கோஷ்டியூர் நம்பியின அவதார திருநாளை முன்னிட்டு கடந்த 10 நாட்களாக சவுமிய நாராயண திருக்கோயில் உற்சவம் மற்றும் சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று பெருமாள்-தாயார் ஆண்டாள் சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Discussion about this post