கோவை போத்தனூர் அருகேயுள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
கோவை போத்தனூர் அருகே நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள கற்சிலைகள் கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்டு கட்டப்பட்டது. முதல் உலகப்போரில் இறந்தவர்களின் நினைவாக இந்த ஆலயத்தை பிரிட்டிஷ்காரர்கள் கட்டியதாக கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் இன்று வரை தமிழ் ஆங்கிலம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தின் உட்புறத் தோற்றம் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டு பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைக்கிறது. இதுகுறித்து கோவை பிஷப் ரவீந்திரன் கூறும்போது 100 ஆண்டு பழமை வாய்ந்த இந்த மார்க்ஸ் ஆலயம் தற்போது அழகாக காட்சியளிக்கிறது என்கிறார். மேலும், இந்த ஆலயத்தின் ஆர்க்கிடெக் நியூ கோத்திக் ஸ்டைலில் கட்டப்பட்டது என்றும், இந்த ஆலயத்தின் பொருட்களை பாதுகாக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் மாதம்தோறும் வருகை தந்து ஆலயத்தைப் பராமரித்து வருவதாகவும் கூறினார்.
Discussion about this post