மதுரை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் தாசில்தார் நுழைந்த விவகாரத்தில், மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரியை மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மக்களவை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள், அரசு மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 20 ஆம் தேதி தாசில்தாரர் சம்பூர்ணம் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தாசில்தாரர் சம்பூர்ணம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின்போது, வாக்கு எண்ணிக்கை மையத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், ஒழுங்கு நடவடிக்கை எடுத்து மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்படுத்துவதே தேர்தல் ஆணையத்தின் நோக்கம் என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான நடராஜன், உதவி தேர்தல் அதிகாரியை மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகளை மாற்றம் செய்ய உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
Discussion about this post