பெரம்பலூரில் தங்களின் கோரிக்கையை ஏற்று பூங்காவை தரம் உயர்த்தி கொடுத்த தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 3 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய சிறுவர் பூங்கா ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், அதில் போதிய வசதி இல்லாததால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் பூங்காவை தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தநிலையில், தமிழக அரசின் ஒப்புதலோடு சுமார் 30 லட்சம் செலவில் சிறுவர்களும், பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில் அறிவியல் பூங்கா தரம் உயர்த்தப்பட்டது. அதனடிப்படையில் அறிவியல் சார்ந்த எதிரொலிக் கருவி, ஊஞ்சல், என பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
Discussion about this post