கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த ஐம்பது லட்சம் மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு 1000 கோடிரூபாய் நிதிஒதுக்கி, சட்டமன்றத்தில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதற்கென வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அத்திகடவு அவினாசி திட்டத்தில், விடுபட்ட பகுதிகளுக்கு விரைவில் நிலத்தடி நீர் உயர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓ. பன்னீர்செல்வம் உறுதியளித்தார். இதற்கு அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
Discussion about this post