திண்டுக்கல் அருகே 10க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகள் செய்ய உத்தரவிட்ட தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் பகுதிக்குட்பட்ட 10க்கும் மேற்பட்ட குளங்களில் குடிமராமத்துப் பணிகளை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, அணைப்பட்டி பிரம்மசமுத்திரகுளம், கதிர்நரசிங்கபெருமாள் கோயில்குளம், கொத்தப்புள்ளிகுளம், மாங்கரைகுளம், பெரியகோம்பையாறுகுளம், கன்னிவாடி நாயோடைகுளம்,புதுக்குளம் கதிரியங்குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குளங்களில் பொதுப்பணித்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு நீர்நிலைகளை பாதுகாக்க முன்வந்த தமிழக முதலமைச்சருக்கும், அரசுக்கும் விவசாயிகள் நன்றியை தெரிவித்து கொண்டனர்.
Discussion about this post