கோவையில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு, மத்திய குழு பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், இதற்கு காரணமாக இருந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கோவையில் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் உறுப்பினர்கள் குழு ஆய்வு செய்ததாக குறிப்பிட்டுள்ளார். மத்திய குழு ஸ்மார்ட் சிட்டி மிக சிறப்பாக இருப்பதாக பாராட்டி இருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டம் இந்தியாவிலேயே சிறப்பாக செயல்படுத்தப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணம் முறையாக செலவழிக்கப்பட்டிருக்கிறது என மத்திய குழு பாராட்டி இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, இவ்வாறான பாராட்டுதலை பெறுவதற்கு காரணமாகவும் இத்தகைய மகத்தான திட்டத்தை அளித்த அப்போதய முதலமைச்சரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கும், கோவை மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தலைவர், கழக பொதுச்செயலாளர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்களுக்கு #கோவை மாவட்ட மக்களின் சார்பிலும், இந்த #SmartCity திட்டங்களை நல்ல நோக்கத்துடன் முழுமையாக பயன்படுத்தி வரும் #கோவை மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். 5/5 @EPSTamilNadu @AIADMKOfficial #AIADMK
— SP Velumani (@SPVelumanicbe) February 28, 2023
Discussion about this post