தூத்துக்குடியில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக தமிழக அரசு தொடங்கியுள்ள கல்வி தொலைக்காட்சி மிக பயனுள்ளதாக இருப்பதாக மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள சி.வ.அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் சார்பில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பானது. மாணவ மாணவிகளுக்காக தொலைகாட்சி பெட்டியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார். இந்த கல்வி தொலைக்காட்சி சேவை வழங்குவதற்காக 87 அரசு பள்ளிகளுக்கு, அரசு இலவசமாக செட்டாப் பாக்சை வழங்கியுள்ளது. இந்நிலையில், கல்வி தொலைக்காட்சியை ஆரம்பித்த தமிழக அரசுக்கும் பள்ளி கல்வித்துறைக்கும் மாணவர்கள் நன்றி தெரிவித்து கொண்டனர். கல்வி தொலைக்காட்சியை பார்ப்பது மிகவும் பயனுள்ளதாகவும், தொலைகாட்சி ஆரம்பித்த தமிழக அரசுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.
விருதுநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின், கல்வி தொலைக்காட்சி குறித்த அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட கல்வி அலுவலர் கல்வி தொலைக்காட்சியின் முக்கியத்துவம் குறித்து மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் , ஆயிரத்து 739 பள்ளிகளில் பயிலும் 3 லட்சத்து 42 ஆயிரத்து 400 மாணவ, மாணவிகள் இந்த கல்வி தொலைக்காட்சியின் மூலம் பயன்பெறுவர் என்றும் மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்தார்.
Discussion about this post