குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தஞ்சை பெரிய கோயிலில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தஞ்சை பெரிய கோயிலில் பிப்ரவரி -5ம் தேதி குடமுழுக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய தொல்லியல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணைந்து மேற்கொண்டு வருகின்றன. குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பக்தர்கள் நெரிசலின்றி சுவாமி தரிசனம் செய்யும் விதமாக, கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. திருப்பணிக்காக 216 அடி உயர கோபுரத்தில் இருந்து அகற்றப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட கலசம், மீண்டும் நாளை கோபுரத்தில் பொருத்தப்பட உள்ளது.
Discussion about this post