தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளராக தமாகவைச் சேர்ந்த நடராஜன் அறிவிக்கப்பட்டுள்ளநிலையில் மன்னார்குடியில் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் காமராஜ் அதிமுகவை அழிக்க நினைப்பவர்களை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்த் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம் திமுக பலமுறை வெற்றி பெற்ற தஞ்சாவூர் தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் செய்யவில்லை என்று குறிப்பிட்டார்.
Discussion about this post