உலகப்புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலய பூர்வாங்க பூஜை சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சை மாவட்டத்தில், பெரிய கோவில் என்றழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் உடனான பெருவுடையார் ஆலயம் உலகப் புகழ்பெற்று சிறந்து விளங்குகிறது. இக்கோயிலுக்கு வெளியூர்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் வருகைதந்து கோயிலின் கட்டிட கலையை பார்த்தும், சுவாமியை தரிசித்தும் செல்கின்றனர். இந்நிலையில் கோயிலின் கும்பாபிஷேகம் 23 ஆண்டுகளுக்கு பிறகு வரும் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. இதனையடுத்து பூர்வாங்க பூஜைகள் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Discussion about this post