மாட்டுப் பொங்கலையொட்டி உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரியகோயிலில் நந்திக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் 108 பசுமாடுகளுக்கு கோ பூஜைகள் நடைபெற்றது.
தஞ்சை பெரிய கோயிலில் மாட்டுப் பொங்கலையொட்டி மகா நந்திக்கு 2 ஆயிரம் கிலோ எடையுள்ள காய்கறிகள், பழங்கள், மலர்கள், இனிப்பு வகைகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட மகா நந்திக்கு 16 வகையான தீபாராதனைகள் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும் அலங்கரிக்கப்பட்ட 108 பசுமாடுகளுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு, மலர்த்தூவி, வஸ்திரங்களை சார்த்தி பக்தர்கள் கோ பூஜை செய்தனர். இதையடுத்து மாடுகளுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டன.
Discussion about this post