தாமிரபரணி மகா புஷ்கர விழா நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 22 லட்சத்து 80 ஆயிரத்து 493 பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தாமிரபரணி மகா புஷ்கர விழா, கடந்த 11ம் தேதி தொடங்கியது. இதையொட்டி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 149 படித்துறையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
புஷ்கர விழாவையொட்டி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள், நெல்லை, தூத்துக்குடியில் உள்ள தீர்த்தக் கட்டங்களில் புனித நீராடினர். இந்நிலையில், கடந்த 13 நாட்களாக வெகு சிறப்பாகக் கொண்டாடாப்பட்டு வந்த தாமிரபரணி மகா புஷ்கர விழா நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
மகா புஷ்கர விழாவையொட்டி, மொத்தம் 22 லட்சத்து 80 ஆயிரத்து 493 பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post