மாநில அளவிலான கபடி போட்டி: தம்மம்பட்டி அணி முதலிடம்

ராசிபுரம் அருகே நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் தம்மம்பட்டி அணி முதலிடம் பிடித்தது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அடுத்துள்ள அரியகவுண்டம்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஆண்டுதோறும் கபடி போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது 59 ஆம் ஆண்டிற்கான இப்போட்டியில் ஆண், பெண் அணிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது.

இதில் தமிழகத்தை சேர்ந்த பெண்கள் பிரிவில் 15 அணிகளும், ஆண்கள் பிரிவில் 28 அணிகளும் மொத்தம் 43 அணிகள் பங்கேற்றன. இதில் ஆண்கள் பிரிவில் நடைபெற்ற போட்டியில் தம்மம்பட்டி லக்கிஸ்டார் அணி 23 புள்ளிகளுடன் வெற்றி பெற்று 25 ஆயிரம் ரூபாயை பரிசாக வென்றது.

Exit mobile version