நீண்ட நாள் விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த தளபதி 67 திரைப்படத்தின் பெயர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு ‘லியோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தினை மாஸ்டர் திரைப்படத்தின் இணை தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். தற்போதைய சினிமா வட்டாரத்தில் மிகவும் கவனிக்கப்படக்கூடிய இயக்குநராக வலம்வந்து கொண்டிருக்கிறார் லோகேஷ். இத்திரைப்படம் நடிகர் விஜயுடன் இவர் இணைந்திருக்கும் இரண்டாவது படமாகும்.
இந்தத் திரைப்படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து த்ரிஷா, சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ போன்ற ஒரு திரைப்பட்டாளமே நடிக்கவிருக்கிறது. இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஏற்கனவே விஜயின் நண்பன் மற்றும் பீஸ்ட் போன்றத் திரைபடங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் தொடக்கவிழா சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது. முதல் கட்டப் படப்பிடிப்பிற்காக மொத்தப் படக்குழுவும் தற்போது காஷ்மீர் சென்றுள்ளது. இவ்வருடம் அக்டோபர் 19ல் லியோ வெளியாக உள்ளது.
Discussion about this post