தைப்பூசத்தையொட்டி சென்னை, வடபழனி முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வடபழனி ஆண்டவருக்கு ராஜ அலங்காரம், விபூதி அலங்காரம் என பல்வேறு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டன. தைப்பூசத் திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் காவடி தூக்கியும், பால்குடம் எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
Discussion about this post