தைப்பூசத்தையொட்டி வடலூரில் நடைபெற்ற ஜோதி தரிசனத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இறைவன் ஒளி வடிவானவர் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில், வள்ளலார் ராமலிங்க அடிகள், வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார். இங்கு ஆண்டு தோறும் தைப்பூசத்தையொட்டி, ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இந்நிலையில், சத்திய ஞான சபையின் 149வது தைப்பூச ஜோதி தரிசனம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. அதிகாலையில் முதல் முறையாக 7 திரைகள் நீக்கப்பட்டு நடந்த ஜோதி தரிசனத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
அதைத்தொடர்ந்து, காலை 9.50 மணி அளவில் இரண்டாவது முறையாக 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. தைப்பூசத்தை ஒட்டி வடலூரில் பாதுகாப்பு பணிக்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post