தீவிரவாதம் உலகிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.
அர்ஜெண்டினாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டின் ஒருபகுதியாக பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது பேசிய அவர், பொருளாதார குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக கூறினார். கருப்புப் பணத்தை ஒழிக்க உலக தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், பிரிக்ஸ் கூட்டமைப்பு சர்வதேச வளர்ச்சிக்கான இஞ்சின் என தெரிவித்தார். மேலும் தீவிரவாதம் உலகிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார்.
Discussion about this post