நாடாளுமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
மத்திய பாஜக அரசு பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்கிறார். வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இடைக்கால பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக விவசாயிகளுக்கு சலுகைகள் அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. சமீபத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த 3 மாநிலங்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதால் மத்திய பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதே போல் மாத வருமானம் ஈட்டும் நடுத்தர வர்க்கத்தினரை திருப்திபடுத்தும் விதமாக வருமான வரி உச்ச வரம்பை உயர்த்தி அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
14 நாட்கள் நடைபெறயிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பட்ஜெட் குறித்தான விவாதங்கள் தவிர 46 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன.
Discussion about this post