வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டு செல்லும் பணி இன்றுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியது. கடந்த ஜூலை 12ஆம் தேதி ரயில் வேகன்களில் தண்ணீர் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. தினமும் 2 ரயில்கள் மூலம் 100 வேகன்களில் 50 லட்சம் லிட்டர் வீதம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட பின்னர், பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
தமிழக அரசின் சீரிய நடவடிக்கைகளால் சென்னை மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. குடிநீர் தட்டுப்பாடு கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து, ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இன்று காலை புறப்பட்ட 159-வது ரயில் சேவையுடன் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுவது நிறுத்தப்பட்டது. இதுவரை 39 கோடியே 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ரயில் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post