திருக்கோயில் பணியாளர்களின் உள்ளிருப்பு போராட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறையீட்டை ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று பிற்பகலில் விசாரணை நடத்துகிறது
பணி நிரந்தரம் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 23ம் தேதி முதல் கோயில் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இந்த போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரியும், இதை அவசர வழக்காக விசாரிக்கவும், ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் முறையிட்டிருந்தார்.இந்த முறையீட்டை அவசர வழக்காக ஏற்ற மதுரைக் கிளை இதுகுறித்து இன்று பிற்பகலில் விசாரணை நடத்துகிறது.
Discussion about this post